சிவகங்கை மாவட்டத்தில் கொடி நாள்

Share others

படைவீரர் கொடி நாள்-2024ஐ முன்னிட்டு,
நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் (பாதுகாப்புத்துறை) / பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர்
33 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான
பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், படைவீரர் கொடி நாள்-2024ஐ முன்னிட்டு, நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் (பாதுகாப்புத்துறை) / பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலையில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் இந்திய தேசம் முழுவதும் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி இன்று மாவட்ட படைவீரர் நலத்துறையின் மூலம் கொடிநாள் வசூல் துவக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு கொடிநாள் வசூல் அரசு நிர்ணயித்த ரூ.1,20,20,000 இலக்கிற்கு மேலாக ரூ.1,23,85,763/- வசூல் செய்து அதாவது 103.04 சதவீதம் அளவிற்கு வசூல் செய்து சிறப்பு சேர்த்துள்ளார்கள்.

மேலும், நடப்பாண்டிற்கு என அரசு நிர்ணயம் செய்யும் இலக்கீட்டை காட்டிலும் வசூல் செய்யும் நடவடிக்கையும் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

நம் தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்கு அல்லும் பகலும் அயராத பாடுபட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றம் அவர்களை சார்ந்தோர்கள் நலன் காப்பதில் பொதுமக்களாகிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும். மேலும், முன்னாள் படைவீரர் குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் உங்கள் தேவைகள் குறித்த கோரிக்கைகளை எப்பொழுது வேண்டுமானாலும் மாவட்ட ஆட்சியாளர் என்ற முறையில் என்னை சந்திக்கலாம்.உங்கள் கோரிக்கைகள் குறித்து உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் அமைத்துக் கொள்ள ஏதுவாக மாவட்ட தொழில் மையம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் தொழிற்பயிற்சிகள் மற்றும் வங்கிக்கடனுதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றையும் நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தில் 2,302 முன்னாள் படைவீரர்கள், 698 விதவையர்கள் உள்ளனர்.

நடப்பாண்டில் மட்டும் 129 பயனாளிகளுக்கு ரூ.39,35,177 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, புற்றுநோய் நிவாரண நிதியுதவி, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம்,
மாதாந்திர நிதியுதவி,இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, வீட்டுக்கடன் மானியம், உடல் வளர்ச்சி குன்றியோர்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவும், 1 பயனாளிக்கு ரூ.30,643 மதிப்பீட்டிலான வங்கி கடன் வட்டி மானியத்திற்கான ஆணையினையும், 30 பயனாளிகளுக்கு ரூ.6,44,000 மதிப்பீட்டிலான தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் ராணுவப்பணி தொகுப்பு மானியத்திற்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணையினையும் என ஆக மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.7,24,643 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததைப்போல், பாதுகாப்புத்துறையின் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர்களும் தங்களுக்கு தேவையானவற்றை அரசின் வாயிலாக வழங்குவதற்கு பரிந்துரை செய்யவும் தயார் நிலையில் உள்ளார். எனவே, உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும். அதனை, நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களிடம், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் (பாதுகாப்புத்துறை) / பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, உதவி இயக்குநர் (பொ) (முன்னாள் படைவீரர் நலன்) கேப்டன் விஜயகுமார் (ஓய்வு), நல அமைப்பாளர் (முன்னாள் படைவீரர் நலன்) அய்யப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *