தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவைகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4,16,569 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்வினை,
மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித்
தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவைகளை சென்னை ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாயவிலைக்கடையில் வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4,16,569 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடையில் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,
தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2024-ஐ தமிழர்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகை மற்றும் வேஷ்டி சேலை வழங்கிட ஆணையிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால், இன்றையதினம் சென்னையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 638 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 167 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 24 முழுநேர நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 829 நியாயவிலைக்கடைகளின் வாயிலாக, மாவட்டத்தில் 4,16,569 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடையில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை பெறுவதற்கென, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உட்பட்ட நியாயவிலைக்கடைகளின் வாயிலாக, குறிப்பிட்டு உள்ள தேதிகளில் பொதுமக்களுக்கு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தங்களுக்கு குறிப்பிடப்பட்டு உள்ள தேதிகளில் சூழ்நிலையின் காரணமாக வர இயலாதவர்கள் 13.1.2024-ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இதனை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலைத் தவிர்த்து, தங்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை எவ்வித சிரமமுமின்றி பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரை ஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேல், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.