சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் கண் சிகிச்சை முகாம்

Share others

சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் அவர்கள், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி , ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்து, பார்வையிட்டனர். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் கரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவைகளின்   ஓட்டுனர்களுக்கு, சாலை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கின்ற வகையில், ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *