கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்
செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.
அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவுப்படி
அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் பிரிவு போலீசார் காணாமல்
போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர். அதன் நடவடிக்கையாக தற்போது சுமார் 7500000 (எழுபத்தைந்து
லட்சம் ரூபாய்) மதிப்புள்ள 505 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி
கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட கண்காணிப்பாளர் உரிய
நபர்களிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க
காரணமான சைபர் கிரைம் பிரிவு போலீசாரை காவல் கண்காணிப்பாளர்
வெகுவாக பாராட்டினார். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட
புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில்
மட்டும் சுமார் 15000000 ( ஒரு கோடி ஜம்பது லட்சம் ரூபாய்) மதிப்புள்ள 1051
செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தெரியாத நபரிடம் இருந்து செல்போன் வாங்குவதை
தவிர்க்க வேண்டும். அது குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட செல்போனாக
இருக்கலாம். மேலும் பொதுமக்கள் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது
திருடப்பட்டாலோ அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு
அளிக்க வேண்டும் இல்லையெனில் (https://eservices.tnpolice.gov.in) என்ற
காவல்துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம் இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தெரிவித்தார்.