தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சென்னையில் கோட்டையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.