ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள்
நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என 22-9-2023-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களில் இந்த நேர நீட்டிப்பின் மூலம் இரண்டு மடங்கு அதிகமான வாடிக்கயாளர்கள் பயன்பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.
மேலும் புதுகிராமம், ராமபுரம், ராமனாதிச்சன்புதூர், அழகனாபுரம், மகாதானபுரம், மயிலாடி, பறக்கை, கேசவன்புத்தன் துறை, ராஜாக்கமங்கலம், கணபதிபுரம் நெசவாளர் காலணி, களியங்காடு, பேயங்குழி, நெய்யூர், ஏத்தகோடு, காட்டாத்துறை, மேக்காமண்டபம், மணலிக்கரை, திற்பரப்பு உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளிலும் தினமும் சிறப்பு ஆதார் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் செய்யப்பட்டு உள்ள சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.