கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜுலை 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25.7.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஜுன் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியாளரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டு இருக்கும். மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
டுடே கிளிப்
