தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்
சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது –
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் மற்றும்
அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து
அனைத்து துறைகளின் வாயிலாக செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள்
அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா என்பதை குறித்தும், திட்டங்களின்
செயல்பாடுகள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும்
பொதுமக்கள் அறிந்துக்கொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
அமைப்பு சாரா சங்கங்கள், ஓய்வூதியர்கள், பல்வேறு வகையான பட்டாக்கள்
உள்ளிட்டவைகள் குறித்த பல்வேறு சட்ட உதவி தகவல்கள் பொதுமக்களிடையே
சென்றடையவில்லை. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடம்
ஏற்படுத்திடுவதற்காக விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் தொடங்கி
வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார். விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முதல் சர்.சி.வி.பூங்கா வரை நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு மாரத்தான்
ஓட்டத்தில் தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள்,
பணியாளர்கள், கோணம் அரசு கலைக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, ஹிந்து
கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட சுமார் 250
பேர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட
வருவாய்
அலுவலர்
பாலசுப்பிரமணியம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
அலுவலர் சத்தியகுமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்
சேதுராமலிங்கம், குற்றவியல் மேலாளர் சுப்பிரமணியன், நீதியியல் மேலாளர்
ஜூல்யன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ் உள்ளிட்ட அரசு
அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *