தக்கலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Share others

பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது , போராட்டத்தை துவக்கி வைத்தது காங்கிரஸ். நாங்கள் போராளிகளாக இந்த சாலை ஓரத்தில் நின்று போராடுவதற்கு காரணம் நீண்ட காலமாக மக்கள் குளத்து புறம்போக்கு இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த இடத்தில் வாழ வேண்டும், மக்கள் பாதுகாப்பான வாழ்வை வாழ வேண்டும், என்று பிரின்ஸ் எம்எல்ஏ பேசினார்.


கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பேசியதாவது, இன்றைக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் 67 வது நினைவு நாள். இந்த நாளில் இந்த சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களுடைய பிரச்சனைக்காக அவர்களுடை பிரச்சனையை இன்றைக்கு எல்லா நிலைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளரை நேற்று நாங்கள் சந்தித்தோம். கண்டன ஆர்பாதம் நடைபெறுகிறது. இவ்வாறு ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனு குமார், கன்னியாகுமரி
மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினு லால் சிங், பத்மநாபபுரம் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிர்மல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி குரல் பத்திரிகைக்காக

சித்ரா, அக்சிதா பெல்ஜெஸ்…


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *