கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்
நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் உடனடி ஆணையினை
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் அறிவியல்
கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்
விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில்
நடந்தது. முகாமில் மாவட்ட ஆட்சியாளர் .ஸ்ரீதர் தேர்வு
பெற்ற பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கி, பேசுகையில் –
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு. தமிழ்நாடு
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக
தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்
வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2124
வேலைநாடுநர்கள் கலந்துகொண்ட இம்முகாமில் 256 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர்.
432 வேலைநாடுநர்கள் முதற்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை
இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ள அனைத்து இளைஞர்கள்
மற்றும் இளம் பெண்களும் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற
வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், பேசினார்.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல்,
திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) பீபீ. ஜாண், பயோனியர் குமாரசாமி கல்லூரியின் தலைவர்
மற்றும் செயலாளர் குமாரசாமி, பயோனியர் குமாரசாமி கல்லூரியின் முதல்வர்
இந்திரா, நாகர்கோவில் மாநாகராட்சி வடக்கு மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட தொழில்
மைய பொது மேலாளர் பெர்பட் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.