அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் , முதலமைச்சரின் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், செய்தித்துறை அரசு செயலாளர் ராஜராம், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, ஆகியோர் முன்னிலையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கொண்டாட அறிவுறுத்தி உள்ளார். இதில் உலகத் தமிழர்கள் அனைவர்களும் இணைந்து கொண்டாடும் வகையில் கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நியமித்து உள்ளார். அனைத்து துறைகளும் ஒன்றிணைத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் 29.12.2024 அன்று தூத்துக்குடிக்கு வருகை புரிந்து அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மறுநாள் 30.12.2024 அன்றும் காலை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மதியம் வருகை புரிய உள்ளார். அதனைத் தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாக நெடுஞ்சாலை துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தினை திறந்து வைத்து விட்டு, பிறகு அய்யன் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்.
அதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தின் அருகில் அமைந்து உள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். அதன்பின் சுகி சிவம் பட்டிமன்றத்தினை காண உள்ளார். மறுநாள் 31.12.2024 அன்று காலை முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டுவார். அதன் பின் அய்யன் திருவள்ளுவர் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். பின்னர் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வார். கருத்தரங்கம் முடிந்த பிறகு உணவு இடைவேளை பின் மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து 1.1.2024 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
அய்யன் திருவள்ளுவர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலளார் முருகானந்தம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு துறைகளும் என்னென்ன பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆணையிட்டு உள்ளார்கள். ஒதுக்கப்பட்ட பணிகளை ஒவ்வொரு துறைகளும் சிறப்பாக மேற்கொள்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய தான் அந்தந்த துறையை சார்ந்த செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இன்றைய தினம் வருகை புரிந்து களஆய்வு மேற்கொண்டார்கள்.
அந்த வகையில் பொதுப்பணித்துறை சார்பாக பந்தல் மற்றும் மேடை அமைப்பது மற்றும் இருக்கைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலாத்துறை சார்பாக ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் இணைந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டோம் என்றால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். இவ்வாறு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
ஆய்வுகளில் செய்தித்துறை இயக்குநர் வைத்தியநாதன், சுற்றுலா இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ் செல்வராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிராசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செயற்பொறியாளர் ஸ்ரீராமன், முன்னாள்அமைச்சர் சுரேஷ் ராஜன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு ஆய்வாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெரால்டு ஆண்டனி (நாகர்கோவில்), விஜயா (தக்கலை), வெனிஸ் (தோவாளை), பிரவீன் குமார் (குழித்துறை), உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன் (கட்டடம் மற்றும் பராமரிப்பு), ராஜலெட்சுமி (மின்னியல்), பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகம், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர்கள் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்க பிள்ளை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அரவிந்த் (நாகர்கோவில்), ரெஜ்வின் (தக்கலை), வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.