கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கருங்கல் பகுதியில் உள்ள தளபதி பயிலகத்தில் நடந்தது. இந்த விழாவின் போது கிறிஸ்துமஸ் கேக்வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சபின் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் வினோத் , பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ், கிள்ளியூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அனிஷ், கிள்ளியூர் தொகுதி தலைவர் பிரனேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் பேசியதாவது குமரி மாவட்டத்தில்
வேலைத் தேடும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முன் வருவோம் மருத்துவ சேவை குறித்த விழிப்புணர்வு நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட தலைவர் சபின் பேசியதாவது
தளபதியின் அன்பு தான் நம் வெற்றிக்கு காரணம், இப்போது சிஷ்டம் சரியாக இயங்க வில்லை என நமக்கு தெரிகிறது.
2026-ல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் எனவும் அப்போது இந்த சரியில்லாத சிஷ்டத்தை சரி செய்து விடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.