குருந்தன்கோடு தெற்கு ஒன்றியம் கட்டிமாங்கோடு ஊராட்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு காரங்காட்டில் இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெமிலன் முன்னிலை வகித்தார். ஒன்றிய இணை செயலாளர் ஜோசப் பெப்பின், கட்டிமாங்கோடு ஊராட்சி செயலாளர் பவுல் ஸ்டான்லி, நிர்வாகிகள் ஜாண், ராஜ செல்வன், ராபர்ட், அபிஷா, அஜின், வினு, ஸ்ரீ பிராப்பி மற்றும் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்த நாள்
