திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

Share others

அருள்மிகு திருச்செந்தூர் செந்திலாண்டவரின் வைகாசி விசாக விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையா
காவடி எடுத்து செல்வது வழக்கம். நாகர்கோவிலில் பல பாதயாத்திரை குழுக்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இன்று 18/5/2024 நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெருவை சார்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசிமகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவின் 37 ஆம் ஆண்டு பாதயாத்திரை ஆனது நாகர்கோவிலில் வைத்து வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நாகர்கோவில் முதல் திருச்செந்தூர் வரை பாத யாத்திரையாக செல்கின்றனர். இவர்கள் புதன்கிழமை 22. 5 2024 வைகாசி விசாகம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று அடைவார்கள். பின்னர் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி காவடியில் எடுத்து செல்லப்பட்ட விபூதி பன்னீர் தேன் போன்ற பொருட்களை செந்தில் ஆண்டவருக்கு செலுத்தி வருவார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *