7-7-2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக 5- 7- 2025 முதல் 8-7-2025 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சுமார் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி திருநெல்வேலி சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய ஊர்களுக்கும் தூத்துக்குடி சாலையில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு எதிர்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, சென்னை ஆகிய ஊர்களுக்கும் தெப்பகுளம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு சேவை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக மூன்று தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் கோயில் வாசலுக்கு இயக்கப்பட உள்ளது. எனவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை பக்தர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
