திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்தை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி நடத்தினார்

Share others

திருநெல்வேலி காவல் சரகத்தில் 11.8.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துறை
துணைத்தலைவர் முனைவர் மூர்த்தி திருநெல்வேலி சரகத்தில் உள்ள
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும்
சுற்றுப்பயணம் செய்தார். அந்த 4 மாவட்ட காவல் அலுவலகங்களுக்கும் நேரடியாக சென்று காவல்
கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக்
கண்காணிப்பாளர்கள் ஆகியோரை சந்தித்து அறிவுறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய
அவர், திருநெல்வேலி சரகத்தில் உள்ள 21 துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு
நேரடியாக சென்று அங்கு ஆய்வாளர்களையும், சார்பு ஆய்வாளர்களையும் சந்தித்து அவர்களுக்கு
உரிய அறிவுரைகளை வழங்கினார்.


அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில்
மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்
நேரடியாகவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக்காவல் கண்காணிப்பாளர்களும்
கானொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு
பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட
வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன்விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில்
நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், வழக்கினை விரைவாக
நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள
நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி
பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வல பாதுகாப்பு அலுவலில் பணியாற்றுவது
சம்மந்தமாகவும், பாதுகாப்பு திட்ட அலுவல் சம்மந்தமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை
ஏற்படாதவண்ணம் அமைதியான முறையில் ஊர்வலங்கள் நடத்திட தேவையான விரிவான
அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ம் நாள்
நடைபெறவிருக்கும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு
மாவட்டங்களில் செய்யப்படவிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குறித்தும் விவாதிக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சிறப்பான பாதுகாப்பு
ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் சிறப்பாக காவல்
பணிபுரிந்த காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு
நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்
சுந்தரவனம் (கன்னியாகுமாரி), ஆல்பர்ட் ஜான்(தூத்துக்குடி),
ஸ்ரீனிவாசன், (தென்காசி), சிலம்பரசன், (திருநெல்வேலி), ஆகியோர்
கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *