திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்காட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு 20- 9- 2023 முதல் 31-12-2023 முடிய ஒரு நிரப்பிற்கு நீரிழப்பு உட்பட மொத்தம் 250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டு உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் உள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.