திருவிழாவில் காணாமல் போன சிறுவன் மீட்பு

Share others

மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 6 வயது சிறுவன். கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவில் பக்தர்களுக்கு உதவ மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் மே ஐ ஹெல்ப் யூ சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளமாடி பகுதியைச் சேர்ந்த மகேஷின் 6 வயது மகன் மண்டைக்காடு திருவிழாவிற்கு குடும்பத்தினருடன் வந்து இருந்த போது கூட்ட நெரிசலில் திடீரென காணாமல் போன சிறுவன் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனின் பெற்றோர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *