தி.மு.க. மகளிரணி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

Share others

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரை அவதூறாக முறையில் பாட்டுப்பாடியும் அநாகரிகமான முறையில் பேசியதை முன் வரிசையில் அமர்ந்து கைதட்டி ரசித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநாடு நடத்திய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும். என திமுக மகளிர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கன்னியாகுமரி மாவட்ட திமுக மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில்
குமரி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், மாநகர மகளிரணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ மற்றும் பலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தனர். அந்த புகாரில்
கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரை அவதூறாக பாட்டுப்பாடியும் அநாகரிகமான முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தை முன் வரிசையில் அமர்ந்து கைதட்டி ரசித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநாடு நடத்திய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.என்று
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *