தீர்வுதளம் நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

Share others

தீர்வுதளம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் – பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், செறுகோல் ஊராட்சி குட்டைக்காடு புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த தீர்வுதளம் நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிதிட்டப் பணிகள் சென்றடைய வேண்டுமென்ற ஒரே நோக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தீர்வுதளம் நிகழ்ச்சியின் நோக்கமே பொதுமக்களின் நீண்டகால பிரச்சனைகளை அறிந்து கொண்டு அவற்றிற்கு உடனடி தீர்வு காண்பதே ஆகும். அதனடிப்படையில் பல்லாயிரகணக்கான மனுக்களுக்கு அந்தந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுநாள் வரை சுமார் 12,000 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளதோடு, முதியோர் உதவித்தொகை, பட்டாக்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் தமிழ்நாடு அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு அரசின் கடமை அனைத்து தரப்பட்ட மக்களையும் பாதுகாப்பதே ஆகும். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிரின் வாழ்வாதாரத்திற்கு பெருதும் ஊறுதுணையாக இருக்கும். மேலும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்லும் பெண்கள் சராசரியாக ரூ.6000 வருமானம் ஈட்டுகிறார்கள். அதில் பேருந்துக்கு மட்டும் ரூ.3000 செலவாகிவிடுகிறது. இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு என மகளிர் இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ம் வகுப்பு வரை படித்த மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியை பயின்று வருகிறார்கள். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது மாணவர்களுக்கும் இந்த திட்டமானது தமிழ்புதல்வன் என்ற திட்டத்தில் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து தரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது ஏழை பணக்காரர், ஆண், பெண், சமுதாய வேறுபாடு இல்லமால் அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ரூ.60 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி மிகவும் பழமையான கோயிலான திருவட்டார் ஆதிகேசவ பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.
இன்று நடைபெற்ற தீர்வு தளம் நிகழ்ச்சில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இம்மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டு மனை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), பீபீ ஜாண் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல் காதர்,பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) மற்றும் உதவி ஆணையர் (ஆயதீர்வை) லொரைட்டா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்லெட்சுமி, உதவி ஆணையர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட குடிநீர்வாரிய செயற்பொறியாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், மாவட்ட மேலாளர் (தாட்கோ) தேவகுருவம்மாள், திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் அருண், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜாண் பிரைட், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜீ, செருகோல் ஊராட்சி தலைவர் அனுசன் ஐயப்பன், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா, டேனியல், துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *