தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025.
மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வரை விழிப்புணர்வு: நமது பகிரப்பட்ட பொறுப்பு என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் தொடக்கமாக அக்டோபர் 27ஆம் தேதி காலை 11 மணி அளவில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் www.cvc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது உறுதிமொழியை பதிவு செய்யும்படி கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மேலும் இந்த கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை சிறப்பிக்கும் விதமாக அக்டோபர் 27ஆம் தேதி அஞ்சல் ஊழியர்களுக்கு வினாடி வினா போட்டியும் அக்டோபர் 28ஆம் தேதி காவல்துறையால் சிறப்பு உரையும் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது என்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.
