கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை
சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு நாளை( 10 ம் தேதி) நடக்கிறது . கன்னியாகுமரிமாவட்ட தேர்வுமையத்துக்கான எழுத்துத்தேர்வு கீழ்க்கண்ட
கல்லூரிகளில் 10 ம் தேதி காலை 10 மணி முதல் தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுமையம்,
சுங்காங்கடை, செயின்ட் சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, இந்த மையத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தும் இடம், பார்வதிபுரம் மற்றும் களியங்காடு.
இறச்சகுளம் அமிர்தா இன்ஸ்டிடியூஷன், பேருந்து நிறுத்துமிடம், இறச்சகுளம் மற்றும் களியங்காடு.
நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,பேருந்து நிறுத்துமிடம் ,பார்வதிபுரம் மற்றும் ஐயப்பன் கோயில்.
தோவாளை, குமாரவேல் சி எஸ் ஐ தொழில்நுட்ப கல்லூரி, பேருந்து நிறுத்துமிடம் தோவாளை.
தோவாளை,லயோலா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி, பேருந்து நிறுத்துமிடம் தோவாளை
பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்துமிடம், பார்வதிபுரம் மற்றும் ஆலம்பாறை
இத்தேர்வினை நடத்துவதற்காக கன்னியாகுமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்தை
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் துணைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் 10 ம் தேதி அன்று காலை 8 மணி முதல் தேர்வுமையத்திற்குள் செல்ல
அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர் தேர்வு கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வுமையத்தில் மட்டுமே தேர்வு
எழுத அனுமதிக்கப்படுவார். தேர்வுமையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது.
அனுமதிச் சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு
மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர் புகைப்படத்துடன்கூடிய வேறுஅடையாள அட்டையினை கொண்டுவருவது
உகந்தது.
செல்போன் கால்குலேட்டர், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் கை கடிகாரம்
தேர்வு எழுதும் அறைக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.
எழுத்துதேர்வுக்கு வரும் பொழுது கறுப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா கொண்டுவர
வேண்டும். பென்சில் கொண்டுவருதல் கூடாது.
அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெறாதவிண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய
இணையதளம் Www.tn.gov.in/tnusrb.com– லிருந்து அழைப்புக்கடிதநகல் எடுத்து தேர்வு
மையத்திற்கு கொண்டுவரவேண்டும்.
இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமலிருந்தாலோ அல்லது
தெளிவாக இல்லாமலிருந்தாலோ விண்ணப்பத்தாரர் தனது புகைப்படத்தினை ஒட்டி அதில் ஏ
அல்லது பி பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்றுவர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண் 04652-220167