நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் ,மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களுக்கு சென்று சொட்டு மருந்து கொடுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள் .