நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி சார்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி கிருஷ்ணன் கோவில், நாகராஜா கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.