திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பேருந்து செல்கிறது.
இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்கு
வடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
அதுபோல் மதியம் சரியாக 2 மணிக்கு வடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மாலை நேரம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக
7:40 க்கு வடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த பேருந்து தினமும் 3 சேவை மட்டும் தான். இதை தவிர , நெடுமாங்காடு , களியல் பேருந்துகள் திற்பரப்பு வழியாக தான் இயக்கப்படுகிறது., நீங்கள் தக்கலை பேருந்து நிலையத்திற்கு போனாலும் , அடிக்கடி டவுண் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு போனாலும் அடிக்கடி நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்புக்கு பஸ் இயக்கம்
