கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது இந்த கடையில் தனியார் நடத்தும் நவீன பார் இயங்கி வந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் பார் செயல்படுவதை தடைசெய்ய வேண்டி மதுரைஉயர் நீதிமன்றத்தின் மூலம் தடை ஆணை வாங்கி வந்து இதனை மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் இடம் கோரிக்கை வைத்தனர் .இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென இரணியல் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையின் உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் கொடியுடன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை
ஒருங்கிணைப்பாளர் ஆன்ஷி சோபா ராணி தலைமையில் நடைபெற்றது. உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், மாவட்ட மண்டல செயலாளர் ரூபன், இரணியல் பேருராட்சி கவுன்சிலரும் நாம் தமிழர் கட்சியின் இரணியல் இளைஞர் பாசறை செயலாளர் சுரேஷ், நுள்ளிவிளை ஊராட்சி பெலிக்ஸ், ஜார்ஜ், நடுவன் மாவட்ட செயலாளர் சுந்தர் சிங், நாகர்கோவில் பொறுப்பாளர்கள் முத்துக்குமார், தனுஷ் உட்பட 40க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில் வேல் குமார் மற்றும் குளச்சல் காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா, இரணியல் காவல் உதவி ஆய்வாளர் ஆன்றோ கெவின் மற்றும் போலீசார் இரணியல் டாஸ்மாக் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு வராத நிலையில் கல்குளம் தாசில்தார் சுனில் குமார் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்தது காவல் ஆய்வாளர்கள் குளச்சல் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரேகா நங்லெட்க்கு தகவல் தெரிவித்தனர் அவர் வந்து போச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மீண்டும் தரையில் அமர்ந்து போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில் வேல் குமார் உயர் அதிகாரிகளின் தகவல்படி நவீன பார் மூடுவதாகவும் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து சுமார் 5 மணி நேரமாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. .
நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
