இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முதல் 5 கிலோ மீட்டர் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம் பரிசுகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.