சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்போட்டியில், 17 முதல் 25 வயதிற்கு உட்பட்ட மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவினர் மற்றும் பெண்கள் பிரிவினர் என மொத்தம் 130க்கும் மேற்பட்ட வீரர்/வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவிற்கு தொண்டி பைபாஸ் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் வரையிலும் பெண்கள் பிரிவிற்கு தொண்டி பைபாஸ் சாலையில் உள்ள பையூர் பேருந்து நிலையம் வரையிலும் இப்போட்டியானது நடைபெற்றது.
மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகளுக்கு வருகின்ற 10.10.2023 அன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.