மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பணிநியமன ஆணை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பணிநியமன ஆணை வழங்கி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி II/II ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று 9 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பணிநியமன ஆணையும், ஊக்கப்பரிசும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.