பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்

Share others

ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்
செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,
காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட
நியமன அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் /நகராட்சிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி,
இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், நுகர்வோர்கள் மற்றும் மாவட்ட
உணவு பாதுகாப்பு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட
ஆட்சியாளரால் வெளியிடப்படும் செய்திக்குறிப்பு
பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரவகைகள் தயாரிக்கும் பணி மாவட்டம் முழுவதும்
நடைபெற்று வருகிறது.

ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகர்கள். அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ்
தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல்
குறிப்பிடவேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று
இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்புகளில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை சேர்க்கவேண்டும். அதிகப்படியான வண்ணங்களை சேர்த்தலைத்
தவிர்க்கவேண்டும்.
இனிப்பு காரவகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின்
விபரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்கவேண்டும்.
அனைத்து வகையான கடைகளும், தரமான சமையல் எண்ணெயை உணவுப்பொருட்கள்
தயாரிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். எண்ணெய் கொதி நிலையில் இருக்கும்போது புதிய
சமையல் எண்ணையை அதனுடன் கலக்கக்கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய
எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி/ உபயோகப்படுத்தக் கூடாது. அதனை பயோ
டீசலாக மாற்றும் திட்டம் (RUCO) Trieco Green Pvt Ltd., Tirunelveli என்ற நிறுவனம் மூலம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதற்கான கருவிகள் மூலம் தினசரி
பரிசோதிக்கப்பட்டு, பெறப்பட்ட எண்ணெய்க்கான தொகை, அந்நிறுவனத்தினால்
சம்மந்தப்பட்ட வணிகர்களுக்கு வழங்கப்படும். எனவே சுருஊழு திட்டத்தில் அனைவரும்
இணைந்து பயன்பெறும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் துாய்மையாக பாதுகாக்கப்பட்ட தண்ணீராக
இருக்கவேண்டும். இனிப்பு காரவகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீரின் தரத்தினை
அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல்
வேண்டும்.
சுத்தமான தண்ணீரில் தான் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். உணவு வியாபாரம்
முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து
பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலரவைத்தல் வேண்டும்.
உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் ஆகியவற்றை
அணியவேண்டும். > உணவு பொருட்களை கையாளுபவர்கள் உடற் தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ்
பெற்றிருத்தல் வேண்டும்.
பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகளில் தயாரிப்பு
தேதி/உபயோகப்படுத்தும் காலம்/ தொகுப்பு எண்/தயாரிப்பாளரின் முகவரி/உணவு
பாதுகாப்பு துறையின் உரிமம்/பதிவு எண் ஆகியவை லேபிளில் தெளிவாகத் தெரியும்படி
அச்சிடப்படவேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில்
தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங்
செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும்
அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும்.
இனிப்புமற்றும் காரவகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் போது உணவு
சேமிப்புக்குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களையே பயன்படுத்தவேண்டும்.
பண்டிகைகால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது/பாலால்
செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை
செய்யக்கூடாது.
அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும்
தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உரிமம் (அ) பதிவுச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள்
/திருமண மண்டபங்கள் /வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத்
தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி
உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். தவறும்
பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிப்பு மற்றும் காரவகைகள் சில்லறை விற்பனை செய்யும்பொழுது காட்சிப்படுத்தப்பட்ட
இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி
கண்டிப்பாக எழுதி வைக்கவேண்டும்.
இனிப்பு காரவகை உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர்கள்/ஈக்கள் மொய்க்கும்
வண்ணம் இனிப்பு / காரவகைகள் திறந்த நிலையில் இருந்தால் வாங்குவதைத்
தவிர்க்கவேண்டும். வாங்கும் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு முறையான ரசீது
பெற்றிருத்தல் வேண்டும். அதிகப்படியாக செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்பு
பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தால் அதனை வாங்குதல் தவிர்க்க வேண்டும். பேக்கிங்
செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முறையான விபரச்சீட்டு உள்ளதா என பார்த்து
வாங்கவேண்டும்.
உணவு தயாரிப்பாளர்கள், அனைவரும் முறையான பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும்.
பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும்
இனிப்பு மற்றும் காரவகை பலகாரங்களை வாங்கும்போது உணவுப்பாதுகாப்பு துறையின்
பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட
பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்தவேண்டும்.
மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு
பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணிலோ/ உணவு
பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண் 04652 – 276786 என்ற
எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *