நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பதிவு எண் தகடு பொருத்தப்படாமல் ஓட்டி வரப்பட்ட 8 வாகனங்கள் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் ரூ.95500 அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.