
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக எந்ததெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறதோ அந்த பகுதிகளில் மீட்புபணிகளை துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதிசெய்ய துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தோவாளை வட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அடைப்பு ஏற்படின், அடைப்புகளை துரிதமாக அகற்றி, தண்ணீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார். இந்த ஆய்வில் தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
