பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தல்

Share others

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதாந்திர குற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,உதவி காவல் கண்காணிப்பாளர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர்கள்,அரசு மருத்துவமனை அதிகாரிகள்,அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , புகார் அளிக்கும் பொதுமக்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும், பிரச்சனைகளை சிறந்த முறையில் கையாள வேண்டும் எனவும்,
குற்றங்கள் மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சனைகள் ஆகியவற்றை நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும்.
பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் அருகில் கூலிப் போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தங்கள் தகவல்களை கன்னியாகுமரி மாவட்டத்தின் 7010363173 எண்ணிற்கு அளிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும்,


வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளுக்கு எதிராக மாவட்டத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிஓசிஎஸ்ஓ குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள்வது, சமூக வலைதளங்களில் தனிப்பட்ட போட்டோக்களை போட்டு மிரட்டினால் உடனடியாக புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருட்டு நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும் எனவும், சிசிடிவி பொருத்தவும், வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கூறவும் அறிவுறுத்த வேண்டும்.
மேலும் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை முடித்து விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும்,
பொது இடங்களில் மது அருந்துபவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்பவர்கள் மீது அதிகபடியான வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள், நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சான்றிழ்கள் வழங்கி பாராட்டினார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *