கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைவாழ் பள்ளி மாணவ,
மாணவியர்களுக்கு தனி படகு போக்குவரத்து
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
நடவடிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை
ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர், நேரில் ஆய்வு
மேற்கொண்டு தெரிவிக்கையில் –
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைவாழ் காணியின மக்களுக்கு தமிழ்நாடு
அரசின் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் சார்பில் பல்வேறு
நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக இதுநாள் வரை மின்சார விளக்கு இல்லாத வீடுகளுக்கு சேலார் விளக்குகள்
பொருத்தப்பட்டு உள்ளதோடு, மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும்
பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட
மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் படகுகளில் சென்று கல்வி பயில
சுமார் ரூ.40 தினமும் செலவிடவேண்டி உள்ளது என மாணவ மாணவியர்களின்
பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்ததன்
அடிப்படையில் பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பேச்சிப்பாறை
ஊராட்சிக்கு உட்பட்ட தச்சமலை, தோட்டமலை, களப்பாறை, மாறாமலை உள்ளிட்ட
பகுதியிலிருந்து கல்வி பயில வரும் 25 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தற்போது
கட்டணம் இல்லாமல் தனியார் படகுகளில் பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் மாணவ மாணவியர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு
பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாணவ மாணவியர்களின் நிரந்தர
வசதிக்காக ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் புதிய படகு வாங்குவதற்கான திட்ட மதிப்பீடு
தயாரிக்க திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு.
பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் .தேவதாஸ், தன்னார்வலர் வின்சென்ட்,
வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.