ஆதர் அட்டையை அப்டேட் செய்ய பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு லீவு போட்டு கொண்டு பெற்றோர்களுடன் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் அருப்தி ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் காலையில் 6 மணிக்கு முன்பாகவே ஆதார் அட்டை அப்டேட் செய்யும் மையங்களுக்கு சென்று டோக்கன் எடுத்து கொண்டு காத்து இருக்கும் அவலநிலை உருவாகி உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒவ்வொரு இடத்திலும் சென்று கேட்கும் போது டோக்கன் முடிந்தது என்ற பதிலையே அதிகமாக கேட்க முடிகிறது. அரசு இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூடுதலாக கவுண்டர்களை திறந்து பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு அடையாத வகையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்பாக உள்ளது. இப்படிப்பட்ட சீசன் நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இதில் தனிப்பட்ட கவனம் செலுத்துவார்களா