இந்திய அஞ்சல் துறை சார்பாக தூய்மையே சேவை 2024 இயக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 17.9.2024 முதல் 1.10.2024 வரை இரண்டு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இந்த வருடம் தூய்மையே சேவை – 2024 இயக்கம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கும், அஞ்சல் ஊழியர்களுக்கும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை விழிப்புணர்வு பேரணி 16.9.2024 அன்று காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடந்தது. இந்த பேரணியில் திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் , திருநெல்வேலி அஞ்சல் முதுநிலை கோட்ட உதவி கண்காணிப்பாளர், டென்னிஸ் தாசன், பாளையங்கோட்டை உபகோட்ட கண்காணிப்பாளர் சண்முகபிரியா,பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் சுமார் 120 அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் மற்றும் வள்ளியூர் பகுதிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் அந்த பகுதி அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.