மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய பின்னர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்
வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா (நாரி சக்தி வந்தன் அதினியம்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேறியதில் பெருமகிழ்ச்சி அடைந்த நமது துடிப்பான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.
மாற்றத்தின் தீபங்களை ஏந்தியவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் முன்னெடுத்த சட்டத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தியா ஒரு பிரகாசமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் விளிம்பில் நிற்கிறது, இந்த மாற்றத்தின் மையமாக நமது மகளிர் சக்தி உள்ளது”.