கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சன்னதி வரை எடுத்து வரும் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
/இந்த ஊர்வலத்தில் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் தலைமையில் இரணியல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் அபிஷேகம், தீபாராதனை, 24 வது ராகுகால துர்கா பூஜை, பரிசு வழங்குதல், அம்மனுக்கு பொங்கலிடுதல், அன்னதானம் நடந்தது. ஊர்வலம் அம்மன் சன்னதி வந்ததும் அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நாதஸ்வர கச்சேரி, விழா தொகுப்பு நன்றியுரை, பொய்க்கால் குதிரை விளையாட்டு, பஜனை, நாதஸ்வர கச்சேரி, வாணவேடிக்கை, அம்மன் பவனி வருதலும் நடந்தது.