கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 146 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வரை நடந்தது. விழாவின் முதல் நாள் காலையில் மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, மகா கணபதி ஹோமம், ஆனந்த விநாயகருக்கு இளநீர் அபிஷேகம், தீபாராதனை, சிற்றுண்டி, கூட்டு பிரார்த்தனை, ஸ்ரீ கைலாசநாதருக்கு இளநீர் அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், மாலை சிறப்பு பஜனை, தொடர்ந்து 55 வது 1008 திருவிளக்கு வழிபாட்டை பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் திருவிளக்கு வழிபாட்டு மன்றம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் இணைந்து நடத்தினர். இரவில் ஆன்மீகப் பேருரை, திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதல் நடந்தது. 2 ம் நாள் விழாவில் காலையில் திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, அபிஷேகம், தீபாராதனை, லட்சார்ச்சனை, மதியம் தீபாராதனை, அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், 33 வது ஆண்டு சிவலிங்க பூஜை, இரவில் ஆன்மீக சிந்தனை இன்னிசை பட்டிமன்றம், பரிசு வழங்குதல் நடந்தது. 3 ம் நாள் விழாவில் காலை அம்மனுக்கு இளநீர் அபிஷேகம், தீபாராதனை, சமய வகுப்பு மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, மதியம் தீபாராதனை, அன்னதானம், மாலை 17 வது பௌர்ணமி பூஜை, இரவு புராண நாட்டிய நாடகம், தீபாரதனை நடந்தது. 4 ம் நாள் விழாவில் காலை அபிஷேகம், தீபாராதனை, சுமங்கலி பூஜை, மதியம் தீபாராதனை, அன்னதானம், மாலை பஜனை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்ளுக்கான பரிசு வழங்குதல், இரவில் மாபெரும் பக்தி மெல்லிசை, தீபாராதனை நடந்தது. 5 ம் நாள் விழாவான ஜனவரி 3 ம் தேதி காலை மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், தீபாராதனை, 25 வது ராகுகால துர்கா பூஜை, அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் தீபாராதனை, அன்னதானம், மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சன்னதி வரை யானை பவனி வருதல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவில் நாதஸ்வர கச்சேரி, விழா தொகுப்பு நன்றியுரை, பொய்க்கால் குதிரை விளையாட்டு, மகா தீபாராதனை இதனைத் தொடர்ந்து பஜனை, நாதஸ்வர கச்சேரி, பொய்க்கால் குதிரை, சிங்காரி மேளம், வாண வேடிக்கை இவைகளுடன் அலங்கோர யானை மேல் அம்மன் பவனி வருதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் சிலம்பரசன், செயலாளர் ஜெயசிங், பொருளாளர் முருகன் ஆகியோர் செய்து இருந்தனர். யானை பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இரணியன் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.