கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா மீனா , துணை காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ்குமார், நல்லசிவம், சந்திரசேகர், செந்தாமரைக்ண்ணன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.