போக்குவரத்துக்கு இடையூறாக கல், மண், ஜல்லி, செங்கல் வைத்திருந்தால் நடவடிக்கை

Share others

விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

கட்டிட வேலை மற்றும் இதர வேலைகளுக்காக சாலையில் கல், மண், ஜல்லி, செங்கல் போன்ற பொருட்களை போட்டு போக்குவரத்துக்கு இடையூறாக விதிமீறலில் ஈடுபடும் வீட்டின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை.. மாவட்ட காவல்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோரத்தில் கட்டுமான பணிகளுக்கு மற்றும் இதர பணிகளுக்காக கல்,மண் ஜல்லி, செங்கல் போன்ற பொருட்களை போட்டு வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறும், சில நேரங்களில் விபத்து ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.
இவ்வாறு செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் உரிமையாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *