கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன்கோவில் அருகில் குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய்
போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த மூதாட்டி நடந்து கொண்டிருக்கும் போது தடுமாற்றம் அடைந்து தலைசுற்றி கீழே விழும் நிலையில் நின்று கொண்டிருந்தார். இதை போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய் பார்த்தார். உடனே விரைந்து சென்று மூதாட்டியை பிடித்து அருகில் உள்ள ஒரு கடையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் விசாரித்த போது அவர் காலையில் உணவு ஒன்றும் உண்ணாமல் வந்ததால் தலைசுற்று ஏற்பட்டது என்றார். இதை கேட்ட போக்குவரத்து பெண் காவலர் தங்க பாய் அருகில் உள்ள கடைக்கு சென்று காலை உணவும், டீயும் வாங்கி கொடுத்துள்ளர். பெண் காவலர் ஒருவர் தன் பணியின்போது மூதாட்டிக்கு உதவி செய்த நிகழ்வை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டினர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தினை அறிந்த குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் போக்குவரத்து பெண் காவலர் தங்க பாய்க்கு பாராட்டுகளை தெரிவித்தார்.