போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி வருகின்ற நவம்பர் 24-ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்க இருக்கிறது.
எனவே தோட்டியோடு முதல் மடவிளாகம் வரையிலான மாநில நெடுஞ்சாலை மூடப்பட்டு சாலைபோக்குவரத்து மாற்றுப்பாதையில் வழங்கப்பட உள்ளது.
எனவே தோட்டியோட்டில் இருந்து திங்கள்நகருக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கல்லூரி பேருந்துகள் மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் தக்கலை பழைய பேருந்து நிலையம் சென்று இரணியல் வழியாக செல்ல வேண்டும். இதற்காக கூடுதலாக நான்கு கிலோமீட்டர் வர வேண்டி இருக்கும். மறுமார்க்கமும் இதே போக்குவரத்தை வாகனங்கள் கடைபிடிக்க வேண்டும்.
மேலும் இருசக்கர வாகனங்கள் பரசேரி வழியாக நான்கு வழிச்சாலை சென்று பேயன்குழி, கண்டன்விளை வழியாக செல்லலாம் இதனால் கூடுதலாக ஒரு கிலோமீட்டர் வர வேண்டி இருக்கும். இதே வழியை எதிர் திசையில் வரும் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல மடவிளாகம், குருந்தன்கோடு, ஆசாரிப்பள்ளம் வழியாக செல்லலாம். இதற்கு கூடுதலாக நான்கு கிலோமீட்டர் செலவாகும்.
இந்த மேம்பால பணியானது நிறைவடைய சுமார் 8 மாத காலம் ஆகும் என்பதால் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்ல குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
