மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு மீதான விசாரணை

Share others

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ்குமார், பார்த்திபன், நல்லசிவம், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *