
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 376 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் ஜூலை 15 அன்று மாநகராட்சி பகுதியில் தொடங்கப்படுகிறது. 52 வார்டுகளிலும் நடத்த வேண்டும். ஏழை எளிய மக்கள் அதிகம் உள்ள வார்டு பகுதிகளில் முகாம் நடத்த வேண்டும். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதோடு, முன்னேற்பாடு பணிகளை செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தினார். முகாமின் நோக்கமானது அனைத்து மக்களும் பங்குபெற்று பயன்பெற வேண்டும். மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை மக்களிடம் நேரில் சென்று விளக்கி விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து நடைபெற உள்ள முகாம்களில் கலந்துகொள்ள செய்து, அவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தினார்.
. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.