கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விளவங்கோடு கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி பால விளையில் மாவட்ட ஆட்சியாளரின் மக்கள் தொடர்பு முகாம் 20 -9 -2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகின்றன. எனவே விளவங்கோடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கேட்டுக்கொள்கிறார்.