மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி கொடை விழா கோலாகலம்

Share others

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.10 ம் நாள் விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் குடும்பம் குடும்பமாக சென்று சமையல் செய்து அனைவரும் பகிர்ந்து உண்டனர். விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட்டன.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *