மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மார்கழி கோடைவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்
மாசிக்கொடைவிழாவினை சிறப்பாக நடத்தும் வகையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள்
குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்ட
ஆட்சியாளர்
ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் மண்டைக்காடு
மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துறை சார்ந்த
அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, தெரிவிக்கையில் –
காவல்துறையினர் திருவிழா காலம் மற்றும் எட்டாம் கொடை விழா நாட்களில் போதுமான
பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பக்தர்கள் வருகைக் காலமான மார்ச் 1-ம் தேதி முதல் கடற்கரையில்
பக்தர்கள் நீராடும் இடத்தில் போதிய பாதுகாப்பு வழங்கவும், புறக்காவல் நிலையம் இயக்குமாறும்,
திருக்கோயிலைச்சுற்றி தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் இடங்களில் பக்தர்கள்
வரிசை ஏற்படுத்தாமல் இருக்கவும், முதல் திருவிழா நாளன்று அன்னதானம் போடும் இடத்தில்
போக்குவரத்து பிரச்சினை ஏற்படா வண்ணம் முறைப்படுத்த வேண்டும். திருவிழா நாட்களில்
போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். விழாவின் போது குறைந்தபட்சம் 3 பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் கோவில், கடற்கரை மற்றும் பேருந்து நிறுத்தங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். விழா
நாட்களில் பேருந்து இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதுடன் பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை
பகுதிகளில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படவேண்டும். விழா நாட்களில் நடைபெறும்
அனைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் காவல்துறை முன் அனுமதி பெற்ற
பின்னரே நடத்தப்படவேண்டும். மேலும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட
விழாக்குழுவினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை சம்பந்தப்பட்ட
காவல்துறை ஆய்வாளர் விழா குழுவினருக்கு வழங்க வேண்டும். கடைகள் மற்றும்
உணவங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. சூதாட்டம் முழுமையாக
தடைசெய்யப்பட வேண்டும். காவல்துறையினர், தேவசம் இணை ஆணையர் ஒத்துழைப்புடன்
உரிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் பக்தர்கள் பொதுமக்கள் வசதிக்காக கோவிலை சுற்றி
மூன்று இடங்களில் எல்இடி திரை அமைத்திடவும், கூடுதலாக மூன்று சிசிடிவி கேமரா பொருத்திட
வேண்டும். கடற்கரை மற்றும் குளிக்கும் இடங்களில் போதுமான மெர்குரி விளக்குகள் (கடற்கரை
மற்றும் கோவிலின் அருகில்) அமைத்திடவும் காவல்துறையினருக்கு தங்கும் வசதி செய்து
கொடுத்திட வேண்டும். திருவிழா நாட்களில் பாதையில் அமைக்கப்படும் பேரிகார்டு தரமானதாக
உள்ளதா என்பதனையும் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். கோவிலின் உட்புறம்
விலை உயர்ந்த பொருட்கள் பாதுகாப்பிற்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
போக்குவரத்து துறையினர் திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களின் வசதிக்காக
தேவையான சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். மேலும் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தின்
முக்கிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யவும், மண்டைக்காடு அருகே தற்காலிக
பேருந்து நிலையம், தகவல் மைய அறை, பயணிகள் அமரும் இடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
வழங்க போதிய டாங்கர் லாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குழித்துறை மற்றும் இரணியல் ரயில்
நிலையங்களில் இ டிருந்து மண்டைக்காடு வரை சிறப்பு பேருந்துகள் இயக்குவதுடன் பேருந்து கால
அட்டவனை முக்கிய இடங்களில் வைக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருந்துகளுக்கு
மேற்படாதவாறு புறப்பட்டு செல்லும் வகையில் இயக்குவதுடன் சிறப்பு பேருந்துகளுக்கு சீரான
கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பேருந்துகளின் சீரான
இயக்கம் தொடர்பாக அறிவிப்புகள் செய்வதோடு வாக்கிடாக்கிகள் பயன்படுத்த வேண்டும். பேருந்து
நிறுத்தத்தில் அலுவலர்கள், காவலர்கள் பணி மேற்கொள்ள தற்காலிக ஷெட் அமைக்கப்பட
வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். மின்சார வாரியத்தினர் திருவிழாக் காலங்களில் தங்குதடையின்றி மின் அழுத்தம்
குறைவின்றி சமச்சீரான மின்சாரம் வழங்க வேண்டும். குளச்சல் முதல் மண்டைக்காடு வரை,
மணவாளக்குறிச்சி முதல் மண்டைக்காடு வரை, திங்கள் நகர் முதல் மண்டைக்காடு வரை உள்ள
சாலை ஓரங்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு ஆவன செய்ய வேண்டும். பழுதான
நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
உதவி இயக்குநர் (பேரூராட்சி) அவர்களின் வழிகாட்டுதலின்படி, மண்டைக்காடு
பேரூராட்சி செயல் அலுவலர் ரதவீதி மற்றும் பேருந்து நிலையம் முதல் திருக்கோயில்
வரையிலான சாலைகளை சீர் செய்தும், தெரு வீதிகளை சுத்தமாக பராமரித்தும், தற்காலிக
கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை பீப்பாய்களில் வைக்க வேண்டும்.
கூடுதலாக 20 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் திருவிழா நாட்களில்
சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே அமைத்து 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். திருவிழாவின்போது வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா
பேருந்தினை ரத வீதிகளில் நிறுத்தம் செய்ய அனுமதிக்க கூடாது. வீதிகளின் குறுக்கே விளம்பர
பேனர்கள் கட்டுவதை தடை செய்து, அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பேனர்கள்
வைப்பதை தவிர்க்க வேண்டும். கார் பார்க்கிங் கட்டணம் குறித்தும், பக்தர்கள் காலணி வைக்கும்
இடத்திற்கும் முறையாக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
தொலைபேசி துறையினர் திருக்கோயில் தொலைபேசி குறையின்றி இயங்க தேவையான
ஏற்பாடுகள் செய்யவேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியாளர், சார் ஆட்சியர், காவல் துறை,
மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, இணை ஆணையர் / செயல் அலுவலர் / தக்கார்
அறநிலையத்துறை முகாம் அலுவலகங்களுக்கு தற்காலிக தொலைபேசி இணைப்புகள்
வழங்கப்பட வேண்டும்.
சுகாதாரத்துறையினர் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் மற்றும்
சுற்றுப்புற பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குளச்சல் நகராட்சி மற்றும் பேருராட்சி
பணியாளர்களை கொண்டு ஆங்காங்கே உள்ள முள் செடிகள், குப்பைகள் அகற்றப்பட வேண்டும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வீதிகளில் குப்பைகள் தேங்காத வண்ணம் சுத்தப்படுத்த
வேண்டும். தேவையான எண்ணிக்கையில் மட்கும் / மட்காத குப்பைகளுக்கான தனித்தனி
குப்பைத் தொட்டிகள் குளச்சல் திங்கள் நகர் செல்லும் சாலைகளிலும் கோவில் சுற்றுப்புறத்திலும்
சம்பந்தப்பட்ட பேரூராட்சியினரால் அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவத்துறையினர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் புறநோயாளிகளின்
சிகிச்சை பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர் மற்றும் மருந்தாளுனர் மூலம்
பொதுமக்களுக்கு தேவையான அவசர மருத்துவ சிகிச்சை வசதி செய்திட வேண்டும். கோவில்
பகுதியில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதுடன் முதலுதவிக்கான மருந்து மற்றும்
உபகரணங்களுடன் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவதுடன் குறைந்தது 3
ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். குளியலறைகள் மற்றும் கழிவறைகள்
சுத்தமாகவும் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும்.
Mobile Toilet மொபைல் டாய்லெட் தவறாது அமைக்க வேண்டும். திருவிழாவின்போது அமைக்கப்படும் தற்காலிக
கடைகள் அமைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் ஏ.வி.எம்.கால்வாயினை சுத்தப்படுத்துவதுடன் மேற்படி
கால்வாயில் குளிக்கும் இடத்தினை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்ப உரிய நடவடிக்கை
பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆலய வளாகத்தில் உள்ள தெப்பக் குளத்தை சுத்தம் செய்து சுத்தமான தண்ணீர் நிரப்பிட வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் சாலைகளில் தேவையான அலங்கார வளைவுகள்
அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி பெறாத அலங்கார வளைவுகள்
அப்புறப்படுத்த வேண்டும். திருக்கோயிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைத்து
செப்பனிட வேண்டும்.
தீயணைப்புத் துறையினர் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி நான்கு தீயணைப்பு ஊர்திகளை
ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான படகு மற்றும்
பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் பணியமர்த்திட வேண்டும். போதுமான நீச்சல் உடைகள் இருப்பில்
இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக உயர்மட்ட அலைகள் இருக்க வாய்ப்புள்ள கடற்கரையின் இரு திசைகளிலும் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு கயிறு மூலம் தடுப்பு
அமைத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். கடற்கரையில் பேரிகார்டு அமைத்து
கூட்டத்தினை ஒழுங்குபடுத்த வேண்டும். பொங்கல் வைக்கும் இடத்தை கண்காணிக்க வேண்டும்.
தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்து ஈடுபடுத்த வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையினர் திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி
விநியோகிக்கவும் தடங்கல் ஏற்படின் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மின்வாரிய
பணிபாளர்களுக்கு தங்கும் வசதி தொலைபேசி வசதி மற்றும் வாகனம் நிறுத்த உரிய இடவசதி
ஆகியன தேவசம்போர்டு இணை ஆணையாளரால் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள்
போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் தற்காலிக மின்விளக்குள் அமைக்கவும் குளச்சல்,
திங்கள் நகர், கீழ்கரை, லெட்சுமிபுரம், முதல் மண்டைக்காடு மணவாளக்குறிச்சி, படர்நிலம்
மண்டைக்காடு, சேரமங்கலம். செம்பன்குளம், லெட்சுமிபுரம் ஆகிய இடங்களில் குழல் விளக்குகள்
எரிவதனை இரவு நேரங்களில் கண்காணித்தும் போதுமான குழல் விளக்குகள் மற்றும்
ஜெனரேட்டர்கள் ஆகியன கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் அமைக்கவும் அவசர
காலத்தில் ஜெனரேட்டர்களை இயக்க தேவையான நபர்களை அமர்த்தவும் மின்சாதனங்கள்
தரமானதாக உள்ளதா என்பதனையும் கண்காணிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பத்தர்கள்
உரிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பயர் புரூப் சீட் கொண்டு பந்தல்கள் அமைக்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவிழா சிறப்புப்பணிக்கு வருகை தரும் காவல் துறையினர்களுக்கு தங்கும் வசதிக்காக
தேவசம் மேல்நிலைப்பள்ளி, மண்டைக்காடு, அரசு நடுநிலைப்பள்ளி, பருத்திவினை, அரசு
நடுநிலைப்பள்ளி, கூட்டுமங்கலம், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, கூட்டுமங்கலம், பெண்கள்
நடுநிலைப்பள்ளி, மணவாளக்குறிச்சி ஆகிய இடங்களில் போதிய இட வசதி ஏற்படுத்தி தர
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்பதனை துணை இயக்குநர்
கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும்
சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் உள்ள உணவுகள் தரம் மற்றும் விலை
ஆகியவை தினசரி ஆய்வு செய்ய வேண்டும்.
மீன்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு துறையினர் நீச்சல் நன்கு தெரிந்த மீனவர்களை
கடலோர பகுதியில் அசம்பாவிதம் நேரிடா வண்ணம் முன்னேற்பாடாக தயார் நிலையில்
வைத்திருக்க வேண்டும். அவர்கள் உயிர் பாதுகாப்பு. கவசத்துடன் இருக்க வேண்டும். கடலில்
குளிக்கும் இடத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பராமரிக்க வேண்டும். கடல் பகுதியில் குளிக்கும்
இடத்தில் கடல் அலைகள் மோதும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து திருட்டு, குழந்தைகள்
காணாமல் போவது போன்ற அசம்பாவிதங்கள் நேரிடா வண்ணம் கண்காணிக்க வேண்டும்.
மண்டைக்காடு திருவிழாவின் போது தரை வாடகை வசூல் செய்வது தொடர்பாக
விதிமுறை மீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும். என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
ஆலோசனைக்கூட்டத்தில்
மாவட்ட
வருவாய்
அலுவலர்
பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி, உதவி
காவல் கண்காணிப்பாளர் பிரேம் கௌதம், இணை ஆணையர் (இந்து சமய
அறநிலையத்துறை) ரத்தனவேல் பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட
திருக்கோவில்களின் அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உதவி
இயக்குநர் பேரூராட்சிகள் விஜயலெட்சுமி, கல்குளம் வட்டாட்சியர் முருகன்,
துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *