கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரங்காடு ஊரில் 62 வயதான மரவேலை செய்து வரும் மரிய பவுல் என்பர் கடந்த 15 ஆண்டுகளாக விதவிதமான கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி வந்தவருக்கு தற்போது தமிழ்நாடு அரசால் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது கொடுத்து பெருமைபடுத்தப்பட்டு உள்ளார். அதுமட்டுமல்லாமல் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தும் பெருமைபடுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் குமரி குரல் பத்திரிகைக்காக நேரில் சந்தித்த போது மரிய பவுல் தன்னுடைய அனுபவத்தை குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மரவேலை செய்து வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் விருதும்
