கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மறு விண்ணப்ப முகாம் ஊராட்சி மன்ற இ – சேவை மையத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கிவைத்தார. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, வளமான குமரியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரசம் ஜெயராஜ், கலை மற்றும் பண்பாட்டுதுறை மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திர ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் இராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.